Kogilavani / 2011 ஏப்ரல் 30 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாநகர சபையின் பிரதம பொது சுகாதாரப் பரிசோதகர் ஆ.ஜீவநாதன் தலைமையிலான 10 பேர் கொண்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இன்று சனிக்கிழமை யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட 14 பேக்கரிகளில் திடீர் பரிசோதனை நடத்தினர்.
இதன்போது சுகாதாரத்திற்கு மிகவும் கேடான நிலையில் காணப்பட்ட 4 பேக்கரிகள் உடனடியாக சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் பேக்கரி உரிமையாளர்களுக்கு எதிராக யாழ். நீதவான் நீதிமன்ற நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினமே விசாரணை செய்த யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா, கைப்பற்றிய பொருட்களை அழிக்குமாறு உத்தரவிட்டதுடன் பேக்கரி உரிமையாளர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணை வழங்கினார்.
எதிர்வரும் 11ஆம் திகதிக்குள் இனங்காணப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்திக்கும் படியும் நீதவான் உத்தரவிட்டார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago