Kogilavani / 2011 ஏப்ரல் 30 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ் குடாநாட்டில் மிதிவெடிகளை அகற்றும் பணிகளில் புதியவர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத் திட்டமொன்றை யாழ்.மகேஸ்வரி நிதியம் முன்னெடுத்துள்ளது.
யாழ் குடாநாட்டில் இன்னமும் மீளக் குடியமர்த்தப்படாதிருக்கும் இடம்பெயர்ந்த நிலையிலுள்ள மக்களை துரித கதியில் மீளக் குடியமர்த்துவதற்கும், விளை நிலங்கள் மற்றும் காணிகளில் இன்னமும் அகற்றப்படாதிருக்கும் மிதி வெடிகளை விரைவில் அகற்றி இக் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நோக்கிலும் இந் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் மேற்படி பணியில் இணைந்து கொள்ள விரும்புவர்கள் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதிக்கு முன்பதாக மிதி வெடிகளை அகற்றும் பணி மகேஸ்வரி நிதியம், இல. 11, 4ஆம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago