Suganthini Ratnam / 2011 மே 02 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று திங்கட்கிழமை காலை முதல் வகுப்புப் பகிஷ்கரிப்பொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
'யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வரை விரிவுரைகள் அனைத்தையும் புறக்கணித்து வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றோம்' என யாழ். பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
'பல்கலைக்கழக மாணவர்கள் ஆகிய நாம் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுகின்றோம். எமது மூன்றம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்தப் வகுப்புப் பகிஷ்கரிப்பு தொடரும். எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் இந்த வகுப்புப் பகிஷ்கரிப்பை முடிவுக்கு கொண்டு வருவோம்' என யாழ். பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மாணவர்களால் தெரிவு செய்யப்பட்ட மாணவர் ஒன்றியத் தலைவரின் பல்கலைக்கழக உட்பிரவேசத் தடையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாது தனது சுயலாபங்களுக்காக செயற்படும் மாணவர் ஆலோசகரை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். மாணவர் ஒன்றியத்திற்கு மாணவர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை உள்வாங்கி மாணவர் ஒன்றியத்தை உடன் மீள ஒருங்கமைக்க வேண்டும் ஆகிய மூன்றம்சக் கோரிக்கைகளை முன்வைத்தே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago