Suganthini Ratnam / 2011 மே 03 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
கஞ்சா வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவருக்கு தலா 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ். நகரை அண்டிய பகுதியில் கஞ்சா வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கடந்த மாதம் 29ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைதுசெய்யப்பட்டிருந்த இந்த மூவரும் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே யாழ். நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா இவர்களுக்கு அபாரதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இவர்களுக்கு முறையே 12,500 ரூபா, 7,500 ரூபா, 5,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
5,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நபர் பணத்தை செலுத்த தவறியதால் ஒரு மாத காலம் சாதாரண சிறையில் வைக்குமாறு நீதவான் தீர்ப்பளித்தார்.
ஏனைய இருவரும் நீதிமன்றில் பணத்தை செலுத்தியமையால் விடுவிக்கப்பட்டனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago