2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உலக உணவுத்திட்ட அதிகாரிகள் யாழ்.விஜயம் - அரச அதிபர் தகவல்

Kogilavani   / 2011 மே 03 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

உலக உணவுத்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக உலக உணவுத்திட்ட அதிகாரிகள் குழு எதிர்வரும் 12 ஆம் திகதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றினை  மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

உலக உணவுத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வேலைத்திட்டங்களான உலர் உணவு, மாணவர் மதிய உணவு, கர்ப்பவதிகள், பாலுட்டும் தாய்மார்களுக்கான சத்துணவு முதலியன வழங்கப்படுகின்றன.

2011 ஆண்டுக்கான தமது திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்யவும், அரச அதிகாரிகளுக்கு உலக உணவுத்திட்டம் தொடர்பாக பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்துவதற்கும் இக்குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X