Super User / 2011 மே 03 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
யாழ். பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய யாழ்ப்பாணம் டச்சுக் கோட்டையை சுற்றியுள்ள அகழியிலிருந்து மிதிவெடிகளை அகற்றும் பணிகளை பொறியியலாளர் படைப்பிரிவு தொடக்கியுள்ளது.
இந்த கோட்டையை நெதர்லாந்தின் நிதி உதவியுடன் புதைப்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் புனரமைத்து வருகின்றது.
ஏப்ரல் 20ஆம் திகதி தொடங்கப்பட்ட இந்த வேலை 3 மாதங்களில் பூர்த்தியடையும் என இராணுவ கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் எதிர்பார்க்கின்றனர்.
யாழ்ப்பாணம் கோட்டை எல்.ரீ.ரீ.ஈ.யின் கட்டுப்பாட்டுக்கு சென்ற பின்னர் அதனை அழிக்கும் வேலையில் எல்.ரீ.ரீ.ஈ.யினர் ஈடுப்பட்டனர்.
இதன் வரலாற்று பெறுமானத்தை பற்றி கருத்திலெடுக்காத எல்.ரீ.ரீ.ஈ.யினர் இதன் சில பகுதிகளை வெடிவைத்து தகர்த்தனர்.
இதனால் யாழ். கோட்டை பெரும் சேதத்துக்குள்ளாகியது. 1996 இல் ரிவிரெச இராணுவ நடவடிக்கையின் பின் இது மீண்டும் பொறியியல் படையினரின் கடும் முயற்சியின் பின் இங்கிருந்த மிதிவெடிகள் அகற்றப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது.
இந்த டச்சுக் கோட்டையை புனரமைப்பதற்கு ஏறத்தாழ 100 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என இராணுவத்தின் செய்தி குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
8 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
21 Dec 2025