Suganthini Ratnam / 2011 மே 04 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
பிறந்து ஒரு மாதமேயான சிசுவுக்கு நஞ்சுத்திரவம் பருக்கி கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அச்சிசுவின் தாயார்; சுன்னாகம் பொலிஸாரால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டள்ளார்.
கடந்த முதலாம் திகதி சுன்னாகம் மின்சார வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து அச்சிசுவின் சடலம் நீலம் பாரித்த நிலையில் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
அச்சிசுவின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது நஞ்சு அருந்தியதால் மரணம் சம்பவித்துள்ளதெனவும் குழந்தையின் நெஞ்சுப்பகுதியிலுள்ள எலும்புகள் முறிவடைந்துள்ளதெனவும் தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் தீவிர விசாரணையையடுத்து கைதுசெய்யப்பட்ட தாயார் இன்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago