Suganthini Ratnam / 2011 மே 04 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். ஊர்காவற்றுறை புளியங்கூடல் இந்தன் முத்துவிநாயகர் ஆலய தீர்த்தக் கேணியிலிருந்து சிறுவனொருவனின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊர்காவற்றுறை புளியங்கூடல் சேர்ந்த எ.எழிலரசன் (வயது 10) என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை இந்தன் முத்துவிநாயகர் ஆலய தீர்த்தோற்சவத்திற்கு சென்ற அச்சிறுவன் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடியபோது சிறுவன் தீர்த்தக்கேணியில் சடலமாக இருப்பதைக் கண்டனர்.
பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து அச்சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago