Kogilavani / 2011 மே 04 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
மீசாலையில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை சாவகச்சேரி பொலிஸார் வவுனியாவில் வைத்து கைது செய்துள்ளனர்.
மீசாலை கிழக்கில் கடந்த மூன்றாம் மாதம் 6 ஆம் திகதி வெள்ளை வானில் பெண்ணொருவர் கடத்தப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த நாள் சாவகச்சேரி பெரியகுளம் என்ற பகுதியில் உள்ள பற்றையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
கனடாவில் இருந்து வந்த கணவர் பிரிந்திருந்த தனது மனைவியையும் மகனையும் வவுனியாவிலிருந்து அழைத்து வந்த வெள்ளை வான் கும்பல் ஒன்றின் உதவியுடன் கடத்திச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். இந் நிலையில் கணவனைக் கைது செய்த சாவகச்சேரி பொலிஸார் வெள்ளை வானை மீட்டதுடன் அதன் சாரதியையும் கைது செய்தனர்.
இந் நிலையில் இக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய வவுனியாவைச் சேர்ந்த இரு நபர்களை நேற்று செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி பொலிஸார் வவுனியாவில் வைத்து கைது செய்தனர்.
பாலகுரு மோகனபிரசாத் (வயது 25), நவரத்தினம் கோபிகிருஷ்ணன் (வயது 28) ஆகிய இருவரையுமே பொலிஸார் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினார்.
இவர்களை நீதிமன்றில் அனுமதித்த போது நீதிபதி எம்.மாணிக்கராசா குறித்த நபர்களை இம் மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
21 minute ago
49 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
49 minute ago
3 hours ago