Suganthini Ratnam / 2011 மே 04 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலய பவள விழா நிகழ்வுகள் நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இரு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் முதலாவது அமர்வு வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி சு.விஜயலட்சுமி தலைமையில் நடைபெறும்.
இதில் பிரதம விருந்தினராக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கலந்துகொள்ளவுள்ளார். சிறப்பு விருந்தினர்களாக தீவகம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜீ.வி.இராதாகிருஷ்ணன், வித்தியாலய பழைய மாணவர் சங்க சுவிஸ் கிளை உறுப்பினர்கள் வ.ஜெயக்குமார், எஸ்.சண்முகநாதன் ஆகியோரும் கௌரவ விருந்தினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.கமலேந்திரன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் தொடர்ந்து கமலமலர் நூல் வெளியீடும் வாழ்த்துரைகளும் மாணவர்கள் கௌரவிப்பும் நடைபெறவுள்ளது. அதிபர் நா.நாகராசா தலைமையில் நடைபெறவுள்ள மாலை நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். சிறப்பு விருந்தினராக தீவகம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஐ.புவனேந்திரன், வேலணை கோட்டக் கல்வி அதிகாரி கு.சரவணபவன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் புங்குடுதீவு பொறுப்பாளர் ஐ.சிவநேசன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக ஓய்வுபெற்ற அதிபர் ந.இராசதுரை, கிராம அலுவலர் எஸ்.சிவா ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago