Suganthini Ratnam / 2011 மே 05 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் பிறந்து இறந்த மூன்று சிசுக்களின் சடலங்களை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக இன்று வியாழக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் பணிப்புரைக்கமைய மேற்படி சடலங்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
யாழ். சுன்னாகம் பகுதியிலிருந்து ஒரு சிசுவும் அல்வாய்ப் பகுதியிலிருந்து ஒரு சிசுவும் மற்றும் இளவாலைப்பகுதியிலிருந்து ஒரு சிசுவும் உறவினர்களினால் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த சிசுக்களின் மரணம் தொடர்பாக மருத்துவப்பரிசோதனை செய்யப்படவுள்ளது. மரணம் நிகழ்ந்தமைக்கான காரணம் குறித்து சிசுக்களின் தாய்மார்களிடம் விசாரனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago