2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இ.போ.ச.வின் சாரதி பயிற்சிப் பாடசாலை யாழில் திறப்பு

Menaka Mookandi   / 2011 மே 06 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிப் பயிற்சிப் பாடசாலை ஒன்று யாழ். கோண்டாவில் உள்ள இலங்கைப் போக்குவரத்து தலமை அலுவலகக்தில் இன்று காலை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் சாரதிகளுக்கு என புதிய பயிற்சிப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் விபத்துக்களைத் கூடியளவில் தடுக்க முடியும் எனவும் சாரதிகள் இப்பாடசாலையில் பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X