Menaka Mookandi / 2011 மே 06 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் மூன்றுமாடி கட்டிடத்தின் முதல் மாடிக்கான வேலைகளில் 65 வீதமானவை இராணுவத்தினரால் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் தவணை பாடசாலை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் இக்கட்டிடத்துக்கான முழு வேலைகளையும் பூரணப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு நாளும் 70 – 80 இராணுவ வீரர்கள் வேலை செய்து வருகின்றனர் என்று யாழ். படைத் தலைமையகம் தெரிவித்தது.
200 x 20 அடி விஸ்தீரணம் கொண்ட இந்த புதிய கட்டிடம் 14 வகுப்பறைகளையும் கவின்கலை கல்வி அலகு ஒன்றையும் பார்வையாளர் அரங்கம் ஒன்றையும் கொண்டது.
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் முயற்சியில் இந்த திட்டத்துக்கான நிதியினை நலன்விரும்பிகளும் அவரது தனிப்பட்ட நண்பர்களும் வழங்கி வருகின்றனர்.
இதற்கான மொத்த செலவு 25 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான அத்திவாரம் கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதி இடப்பட்டது. பாவலர் முரையப்பா பிள்ளையால் நிறுவப்பட்ட இக்கல்லூரி கடந்த வரும் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago