Suganthini Ratnam / 2011 மே 08 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வரும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காதலில் ஏற்படும் முரண்பாடுகள் காரணமாகவும் வக்கீரதன்மையுடைய ஆண் வர்க்கத்தினரால் காதல் வலையில் விழும் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தும் சம்பங்களும்
யாழ்ப்பாணத்தின் கிரமாமப்புறங்களில் மேலோங்கி காணப்படுகிறது.
கணவனை இழந்த பெண்கள், வன்செயலில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கணவன்மார் தடுப்புமுகாமிலுள்ளவர்களின் மனைவிமார்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவங்களும் காணப்படுகின்றனவென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பிரச்சினைக்களுக்கு சட்டத்தின் உதவியுடன் தீர்வைப் பெற்றுக்கொடுக்க தாங்கள் முயன்று வருவதாக யாழ். பொலிஸ் நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago