Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 08 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
உலகத் தமிழ் பண்பாட்டில் கலாசார, கலை இலக்கியங்களில் யாழ். சமூகம் உயர்நிலையிலும் முன்னிலையிலும் இருப்பதாக யாழ். இந்திய துணைத்தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். இந்துக் கல்லூரியில் 'புதுச்சேரி புளு' என்னும் ஓவியக்கண்காட்சி நடைபெற்று வருகிறது. இறுதிநாளான இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவிய கண்ணோட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தென்னிந்திய கலைப்பண்பாடுகளை யாழ். சமூகம் அடிப்படையாகக் கொண்டாலும் தனித்துவ பண்பாட்டில் யாழ். சமூகத்தினர் சிறந்தவர்களாக காணப்படுகிறார்கள். தமிழ்க் கலைக்குரிய பண்புகளும் கலைஞர்களின் திறமைகளும் யாழ். மக்களிடம்; நிறையவே பொதிந்திருக்கின்றன.
தமிழ் பண்பாட்டின் இதய நாதமாக யாழ்ப்பாணம் இன்றும் இருக்கிறது. இனியும் இருந்து வருமென்று தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். ஓவியங்களின் மொழியை இலகுவில் விளங்கிக்கொள்ளும் தன்மையும் கலைகளில் அதித ஆர்வமுடைய கலைஞர்களும் யாழ்ப்பாணத்தில் அதிகம் இருப்பதாகவும் எஸ்.மகாலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 May 2025