2025 மே 22, வியாழக்கிழமை

நாளை யாழ். மாவட்ட பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2011 மே 08 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி,கிரிசன்)

யாழ். மாவட்ட பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் நாளை திங்கட்கிழமை காலை 9 மணிக்கு யாழ். பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தழிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், ஈஸ்வரபவன் சரவணபவன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் ஜக்கிய தேசியக் கட்சி யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி மகேஸ்வரன் விஜயகலா கலந்து கொள்ளவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தியில் யாழ். பிரதேச செயலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி முகாமைத்துவம் எவ்விதம் பயன்படுத்தப்படுகிறது. அப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கான எதிர்காலத்திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட அபிவிருத்தி தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X