2025 மே 22, வியாழக்கிழமை

யாழில் மாபெரும் இந்திய கல்விக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2011 மே 09 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இந்திய கல்வி நிறுவனங்களினால்  முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் மாபெரும் கல்விக் கண்காட்சியொன்று நடத்தப்படவுள்ளது.

இந்த மாதம் 17ஆம் 18ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை யாழ். பொதுநூலகத்தில் இந்த கல்விக் கண்காட்சி  நடைபெறவுள்ளது.  

இந்தக் கல்விக் கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசாங்க நிறுவனங்களைச் சார்ந்தவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X