2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மாதகலில் மர்மப்பொருள் வெடித்து சிறுவர்கள் மூவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2011 மே 11 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாதகல் பகுதியில் மர்மப்பொருளொன்று வெடித்ததில் மூன்று சிறுவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடிப்பு சம்பவமானது  யாழ். மாதகல் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி சிறுவர்கள் விளையாட்டுப்பொருளை ஒத்ததாக காணப்பட்ட மர்மப்பொருளை எடுத்து விளையாடிக்கொண்டிருந்தபோது அது திடீரென்று பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளது.

மாதகலை சேர்ந்தவர்களான ஜதுசன் (வயது 6), தனுஜன் (வயது 3), ஹம்சி (வயது 3) ஆகியோரே படுகாயமடைந்தவர்கள் ஆவார்.

இதிலொருவர் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாது பாதிக்கப்பட்டுள்ளதாக சிகிச்சையளித்த வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X