Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 11 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
அரசாங்கத்தினால் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவதற்காக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.
இந்த உயர்மட்டக்குழுவின் விஜயம் இந்த மாதம் 19ஆம் 20ஆம் 21ஆம் திகதிகளில் அமையவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இந்த அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளனர். நாட்டின் அமைதி, சௌபாக்கியத்திற்காக நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோயில் மற்றும் நாகவிஹாரை ஆகியவற்றில் விசேட பூஜை வழிபாடுகளும் அமைச்சர்களின் பங்கேற்றலுடன் நடைபெறவுள்ளன.
உடுவில் பிரதேச செயலகக் கட்டடம், குடத்தனை 'சேவாபியச'கட்டடம், கற்கோவளம் பிரதேச செயலாளருக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலம், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் யாழ். மாவட்ட விடுமுறை விடுதிக் கட்டடம் ஆகியன இந்த மாதம் 20ஆம் 21ஆம் திகதிகளில் திறந்துவைக்கப்படவுள்ளன. இக்குழுவினர் மேற்படி நிகழ்வுகளில் கலந்துகொள்வதுடன் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், கிராமசேவகர்களுக்கான மாநாட்டிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 May 2025