2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் மாவைகலட்டி மீள்குடியேற்ற மாணவர்கள்

Menaka Mookandi   / 2011 மே 12 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வலி வடக்கில் உள்ள மாவைகலட்டிப் பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெற்று இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் மீளக்குடியேறிய மக்களின் பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்வதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.

கடந்த காலத்தில் இந்தப் பகுதியில் குடியேறியுள்ளவர்களின் பிள்ளைகள் அளவட்டி அருணோதயாக் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, அருணாசலம் வித்தியாலயம் என பல்வேறு பாடசாலைகளிலும் அரம்பக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியை கற்றுவந்தார்கள்.

மீள்குடியேற்றத்தைத் தொடர்ந்து மாவை கலட்டிப் பகுதியில் இருந்து மேற்குறிப்பிட்ட பாடசாலைகளுக்குச் செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களினாலும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் பாடசாலைக்குச்செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X