2025 மே 22, வியாழக்கிழமை

மிதிவெடி அகற்றப்படாத பகுதிகளில் பிரவேசிக்க தடை

Suganthini Ratnam   / 2011 மே 12 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கொழும்புத்துறைப் பகுதியில் மிதிவெடி அபாய எச்சரிக்கை குறியீடு பொருத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள்  அவற்றைப் பொருட்படுத்தாது அப்பிரதேசத்திற்குள் அத்துமீறிப் பிரவேசிப்பதாகவும் யாழ். மாவட்ட மிதிவெடி செயற்பாட்டு அலுவலகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொழும்புத்துறைப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை குறியீடுகளை மக்கள் அகற்றி வருகின்றனர்.  மிதிவெடி அகற்றப்படாத பிரதேசங்களில் மிதிவெடி என்று மூன்று மொழிகளில் எழுதப்பட்டு மஞ்சள் பட்டிமூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. மிதிவெடி அபாயம் என்று சிவப்புக் குறியீடு பொருத்தப்பட்டுள்ளது. இவற்றுக்குள் பிரவோசிப்பதோ அவற்றை அகற்றுவதோ தவறான செயலாகும்.

மிதிவெடி அகற்றப்படாத பிரதேசங்களுக்குள் அத்துமீறி பிரவேசித்து உயிராபத்தை அல்லது அவய இழப்புக்களை  எதிர்நோக்கினால் அதற்கு யாழ். மாவட்ட மிதிவெடி செயற்பாட்டு அலுவலகம் எந்த வகையிலும் பொறுப்பாளியாக முடியாது.  மிதிவெடி அகற்றப்படாத கொழும்புத்துறைப் பகுதிக்குள் மக்கள் நுழைந்து உங்கள் வீடுகளைப் பார்வையிட வேண்டாமென மிதிவெடி செயற்பாட்டு அலுவலகம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X