Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 12 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் இணைய மையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நல்லூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மாணிக்கராசா தெரிவித்துள்ளார்.
நல்லூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் பெரும் தாக்கத்தை இணைய மையங்கள் ஏற்படுத்தி வருகின்றன. அவர்கள் தனியறைகளில் வைக்கப்பட்டுள்ள கணினிகளில் என்ன செய்கின்றனரென எவருக்கும் தெரியாது. கல்விச் செயற்பாடுகளிலும் கலாசாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இணைய மையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்யும்போதுதான் மாணவர்களின் கல்வி மட்டத்தை உயர்த்த முடியும்.
மேலும் பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு இடை விலகும் மாணவர்களை தொடர்ந்து கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ளவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். எனது பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் பணம் பெற்று மாணவர்களுக்கு அனுமதி வழங்கும் அதிபர்கள் தொடர்பாக எழுத்து மூலம் தகவல்கள் தருமிடத்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
பாடசாலைகளுக்கு கையடக்கத் தொலைபேசிகளை மாணவர்கள் கொண்டு வருகின்றனரென முறைப்பாடுகள் வருகின்றன. பெற்றோர்களை அழைத்து இது தொடர்பாக கேட்டால் பாதுகாப்புக்காக கொடுத்து விடுகின்றோமென தெரிவிக்கின்றனர். இருப்பினும் பாடசாலைகளுக்கு கையடக்கத் தொலைபேசி கொண்டு வரும் மாணவர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago