Kogilavani / 2011 மே 13 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
புன்னாலைக்கட்டுவன் வடக்கு மீள் எழுச்சிக் குழுவின் தலைவரின் மனைவி இனம் தெரியாதவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு புன்னாலைக்கட்டுவன் வடக்கு மீள் எழுச்சித்திட்ட தலைவரின் வீட்டிற்குச் சென்ற இனம் தெரியாத கும்பல் ஒன்று அவரை அழைத்தபோது அவர் அச்சத்தில் விட்டின் பின்னால் தப்பி ஓடியுள்ளார்.
இதன்போது அவரது மனைவி அக்கும்பலுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுப்பட்டதை தொடர்ந்து அவர் மீது தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸாரும் படையினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago