Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 15 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். வலிவடக்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஈராக் தூதுவர் கட்டன் கரா கிளப் அங்குள்ள மக்களின் அவலமான நிலைமையைக் கண்டு மனம் வெதும்பி கண்ணீர் வடித்துள்ளார்.
இவர்களின் அநாதரவான நிலைமையைக் கண்ட இவர், கைவசம் வைத்திருந்த ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை தலா 3000 ரூபாய் வீதம் மீள்குடியேறிய குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார்.
வலிவடக்கு பிரதேச செயலர் எஸ்.முரளிதரனுடன் சென்ற ஈராக் தூதுவர் அந்த மக்களுடன் இருந்து உணவு உட்கொண்டுள்ளார்.
உங்களுக்கு அரசாங்கத்தின் கிடைக்கின்றாதா?, அரசசார்பற்ற நிறுவனங்களின் எவ்வாறான உதவிகள் உங்களுக்கு கிடைக்கின்றன? போன்ற கேள்விகளை அந்த மக்களிடம் கேட்ட ஈராக் தூதுவர், மீண்டும் உங்களை தான் சந்திக்கவுள்ளதாகவும் கூறினார்.
ஈராக் தூதுவர் வலிவடக்கிற்கான விஜயமொன்றை நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மேற்கொண்டிருந்தார்.
jayarani Sunday, 15 May 2011 08:07 PM
சந்தோசமான செய்தி .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 May 2025