Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 15 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். வலிவடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்காக உலக வங்கிக்குழு எதிர்வரும் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அறிவித்துள்ளார்.
வலிவடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட 9 கிராம அலுவலகர் பிரிவுகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இந்த உலக வங்கிக்குழு நேரடியாக ஆராய்ந்து மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
அங்குள்ள வீடுகள், பாடசாலைகள், வீதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் போன்றவற்றை உலக வங்கி மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.
வலிவடக்கின் மாவிட்டபுரம், மாவிட்டபுரம் தெற்கு, தந்தை செல்வாபுரம், தெல்லிப்பளை, வறுத்தளை விளான், கொல்லங்கலட்டி, கீரிமலை, பளை, வீமன்காமம் ஆகியவற்றின் வடக்கு, தெற்கின் ஒரு பகுதியிலும்; கடந்த 9ஆம் திகதி இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago