Suganthini Ratnam / 2011 மே 16 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
'மக்களுடைய வாழ்க்கையைக் கட்டியெழுப்புதல் - சமூகப் பொருளாதாரத்தைக் கட்டிக்காத்தல்' என்னும் கருப்பொருளில் தொடர் கருத்தமர்வு இன்று திங்கட்கிழமை தொடக்கம் 26ஆம் திகதி வரை யாழ்.சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான கோப்பாய் நிலையத்தில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அமல மரித்தியாகிகள் சபையின் சமூகசேவை ஊழியர்களுக்கான மேற்படிக் கருத்தமர்வை தழிழகத்திலிருந்து வந்த வளவாளர்களான கர்ணன், காமராஜ், திருமதி தமிழரசி ஆகியோர் நடத்தவுள்ளனர்.
தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறும் இக்கருத்தமர்வில் சமாதன முன்னெடுப்புக்களில் மக்களின் பங்குபற்றுதல் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago