2025 மே 22, வியாழக்கிழமை

'அப்பா குடிக்கவேண்டாம்' பாடசாலை மாணவர்களுக்கான சித்திரப் போட்டி

Suganthini Ratnam   / 2011 மே 16 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தேசிய மனநல நிறுவனத்தின் மதுபாவனைத் தடுப்பு பிரிவினரால் எதிர்வரும் ஜு10ன் மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ள உலக மதுபாவனைத் தடுப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கிடையே சித்திரப் போட்டியை நடத்தவுள்ளது.

'அப்பா குடிக்கவேண்டாம்' என்னும் கருப்பொருளை மையமாக வைத்து பாடசாலை மாணவர்களுக்கிடையே மதுபாவனை தொடர்பாக வெறுப்பை ஏற்படுத்துதலையும் அது தொடர்பாக செயற்படுவதன் அவசியத்தையும் கருத்திற்கொண்டு இப்போட்டி நடத்தப்படவுள்ளது.

இதில் தரம் 6 முதல் 9 வரை கனிஷ்ட பிரிவாகவும் தரம் 10 முதல் 13 வரை சிரேஷ்ட பிரிவாகவும் இரு பிரிவுகளாக இப்போட்டி நடைபெறவுள்ளது.

போட்டியாளர்கள் சித்திரங்களை நீர்வர்ணம் மற்றும் பெஸ்டல் வர்ணங்களைப் பயன்படுத்தி 18 அங்குல நீளமும் 12 அங்குல அகலமும் கொண்ட ஏ3 தாளில் வரைதல் வேண்டும்.

போட்டியாளர்கள் ஆக்கங்களை சித்திர பாட ஆசிரியர், பாடசாலை அதிபர் ஆகியோரின் உறுதிப்படுத்தலுடன் கல்வி கற்கும் தரத்தைக் குறிப்பிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக உளவள சமூக சேவையாளர் பிரிவு, மதுபாவனை தடுப்புப் பிரிவு, தேசிய மனநல நிறுவனம், அங்கொட என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X