2025 மே 22, வியாழக்கிழமை

மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபருக்கு விளக்க மறியல்

Super User   / 2011 மே 16 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கோப்பாய் பிரதேசத்தில் தனது 19 வயது மகளை மது போதையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நபரை 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நிதிமன்ற நீதிபதி ஏ.கே.ஆனந்தராஜா இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

இவர் மதுபோதையில் தனது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முற்பட்ட போது இவரது மனைவி அயலவர்களின் உதவியுடன் உடனடியாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கத்தனர்.
இதனையடுத்து கோப்பாய்; பொலிஸார் குறித்த சந்தேகநபரை  கடந்த வெள்ளிக்கிழமை  கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவர் ஏற்கனவே மூன்று தடவைகள் தனது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முற்பட்டதாகவும் நான்காவது தடவையாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர் மது போதையில் தனது மகனை கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்று அண்மையிலே விடுதலையானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • lankan Monday, 16 May 2011 11:19 PM

    இவங்க எல்லாரையும் போட்டு தள்ளுங்க பொலிஸ்

    Reply : 0       0

    faisar Tuesday, 17 May 2011 06:41 PM

    இவன் மனிதனா இவன் உலகத்துக்கு தேவையில்ல.

    Reply : 0       0

    xlntgson Tuesday, 17 May 2011 09:03 PM

    incest என்னும் இக்குற்றத்துக்கு தண்டனை மிகக் கடுமையானது. ஆனால் மரண தண்டனை கசை அடி என்பவை இல்லாமல் போன பின்னால் எல்லாரது மானமும் போவதுதான் இதில் தண்டனை, தேசத்தின் மானமும் போகின்றது! கட்டி வைத்து அடிப்பது பழைய முறை. ஆனால் அதிலும் மரணம் சம்பவிக்க வாய்ப்பு இருக்கிறது!
    பொலீஸ் என்ன செய்து விடும், பாவத்துக்கு பரிகாரி என்ன செய்வான், அவனையும் கூட இப்போது சிறையில் தள்ளிவிடுவார்கள். அதாவது abortion. அதைக்கூட இப்போது செய்ய இயலாது! தந்தைக்கு+ மகளுக்கு பிறந்த பிள்ளை என்ன உறவு என்று எகத்தாளம் படிப்பார்கள் இப்போது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X