Super User / 2011 மே 17 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
இம்முறை யாழ்ப்பாணத்தில் வெசாக் கொண்டாட்டங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. யாழ். நாக விகாரையில் விசேட பூசை வழிபாடுகளும் அன்னதான நிகழ்வுகளும் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
இதேவேளை, யாழ். நகர வீதிகளில் செல்லும் பொதுமக்களுக்கு படையினரால் உணவுகள் மற்றும் திண்பண்டங்களை வழங்கப்படுகின்றன.
யாழ். பொது நூலக முன்றலில் மிகப்பிரமாண்டமான வெளிச்ச வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் பார்வைக்காக இன்று செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மஹிந்த கத்துருசிங்காவினால் திறந்துவைக்கப்படவுள்ளது.
வெசாக் கொண்டாட்டங்களை பார்ப்பதற்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ். படைகளின் தலைமையகம் அறிவித்துள்ளது.


2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago