2025 மே 22, வியாழக்கிழமை

வெசாக் தினத்தில் மாடு அறுத்த ஆறு பேர் கைது

Suganthini Ratnam   / 2011 மே 17 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கைதடி வடக்கு பகுதியில் வெசாக் தினமான இன்று மாடு அறுத்ததாகத் தெரிவிக்கப்படும் 6 பேர் சாவகச்சேரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில் கைதடி வடக்கு பகுதியிலுள்ள பற்றையொன்றினுள் வைத்து  சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காளை மாட்டை திருடி இறைச்சிக்காக அறுப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, வேறொரு இடத்தில் சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடு அறுத்த நால்வரும் கண்ணி வைத்து கொக்குகளைப் பிடித்து கொலை செய்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X