2025 மே 21, புதன்கிழமை

யாழில் கர்நாடக இசைப் பெருவிழா

Menaka Mookandi   / 2011 மே 22 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

வட மாகாணத்தைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்குபற்றும் கர்நாடக இசைப் பெருவிழா தற்பொழுது யாழ். மாநகரசபைத் திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி மற்றும் அவரது பாரியார், யாழ். மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். இந்திய துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம்,  நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் யாழ். குடாநாட்டைச் சேர்ந்த கலைஞர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

கர்நாடக இசையை யாழ். மண்ணில் நிலைத்தோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவே வட மாகாணத்தைச் சேர்ந்த அனைத்துக் கலைஞர்களும் ஒரே மேடையில் இந்த நிகழ்வை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .