Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 19 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனநாயக அரசியல் பிரசாரங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்துவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிகளிடம் பாதுகாப்பு படைகளின் யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க நேற்று சனிக்கிழமை உறுதியளித்துள்ளதாக அளவெட்டியில் இடம்பெற்ற தாக்குதலை கண்டிப்பதாகவும் பாதுகாப்பு படைகளின் யாழ் படைத் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிகளுக்குப் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸாருக்கும் இராணுவத்தினரைப் போன்ற சீருடை அணிந்த குழுவொன்றுக்கும் இடையில் யாழ், அளவெட்டியில் வாக்குவாதம் ஏற்பட்ட பின்னணியில் இச்சந்திப்பு நடந்தது' என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இச்சந்திப்பில் பங்குபற்றினர். இச்சந்திப்பு தொடர்பாக பாதுகாப்பு படைகளின் யாழ் படைத் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ் படைத்தளபதி கொழும்பிலிருந்து திரும்பியவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதலை தான் கண்டிப்பதாக கூறினார்.
'ஜனநாயக முறையில் எவரும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் யாழ் தளபதி என்ற வகையில், இச்சம்பவம் குறித்து நான் மிகவும் கவலையடைந்துள்ளேன்' என எம்.பிகளிடம் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
பொலிஸாரும் இராணுவத்தினரும் தனித்தனியான விசாரணைகளை நடத்தி வருவதாகவும் விசாரணைகளின்பின் குற்றவாளிகளுக்கு எதிராக சாத்தியமான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் நலன்புரித் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற அமர்வுகளில் பேசியுள்ளோம். ஆனால், 16ஆம் திகதி நடந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானதாகும் என சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள தமது அரசியல் பிரசாரங்களுக்கான பாதுகாப்பு குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர்.
இதற்கு மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க பதிலளிக்கையில், அவர்களின் தேர்தல் பிரசாரங்களுக்கு அதிகபட்ச வழங்குவதாக வாக்குறுதியளித்தார். 'உள்ளூராட்சித் தேர்தலுக்கான உங்கள் பிரசாரங்களைத் தொடர்வதற்கு பொலிஸாருக்கு எந்த உதவியையும் தேவைப்பட்டால் வழங்கத் தயார் என நான் உறுதியளிக்கிறேன்' என அவர் கூறினார்.
பாதுகாப்புப் படைகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகளையும் சந்தேகங்களையும் தீர்ப்பதற்காக இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
mam.fowz Monday, 20 June 2011 12:06 AM
அடிக்கும் கை அணைக்குமா ?
அணைக்கும் கை அடிக்கும் ?
எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி இது வருது
பாவம் த/மக்கள் !!
Reply : 0 0
Jeewan Monday, 20 June 2011 01:25 AM
எந்த ஜோக்குக்கு இந்த சிரிப்பு?
Reply : 0 0
Santhiran Monday, 20 June 2011 11:09 AM
அடி வாங்கியதும் துன்பப்படுவதும் மக்கள் தானே! நீங்கள் சிரியுங்கோ! வாய்க்குள் இலையான் போய்விடும்.. கவனம்.. கீ..கீ.கீ,,,
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago