2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அளவெட்டி தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட பொலிஸ் குழு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 22 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

அளவெட்டியில் அண்மையில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் பிரசார கூட்டத்தில்  புகுந்து தாக்குதல் நடத்திய குழுவினரை கண்டுபிடிப்பதற்காகவும் விசாரணைகளை நடத்துவதற்காகவும் கொழும்பிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழு தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க இன்று தெரிவித்தார்.

அளவெட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் புலனாய்வுத் தகவல்களை பெற்று இக்குழுவினரை  சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து விசாரணை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார்.

அளவெட்டி மகாஜனசபை மண்டபத்தில் கடந்த 16ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் உள்ளூராட்சிமன்ற  தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றபோது இனந்தெரியாதோரால் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X