2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வடமாகாணத்தில் பாதுகாப்புத் திணைக்களத்தின் குடிசன மதிப்பீட்டுப் பணி

Suganthini Ratnam   / 2011 ஜூன் 23 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

வடமாகாணத்தில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் புள்ளிவிபர குடிசன மதிப்பீட்டுப் பணி முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த வருடத்திற்கான அகில இலங்கை ரீதியான குடிசன மதிப்பீட்டுப் பணிகளின் முதற்கட்ட நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளது.  இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக வடமாகாணத்தில் பாதுகாப்புத் திணைக்களம் குடிசன மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தல்கள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரினால் யாழ். மாவட்ட பிரதேச செயலாளர்கள், உதவி அரசாங்க அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்பக்கட்ட பணியை மேற்கொள்வதற்கு வசதியாக வடபகுதிக்கு 40க்கும் மேற்பட்ட வாகனங்களும் மற்றும் தென்னிலங்கை அலுவலர்களில் ஒரு பகுதியினரும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை, குடிசன மதிப்பீட்டுப் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன்,  இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது. ஏற்கெனவே புள்ளிவிபரத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பதிவு நடவடிக்கைகளின்  பிரகாரம் இந்த மதிப்பீட்டுப் பணிகள் நடைபெறவுள்ளது.

வீட்டில் தற்போதுள்ளவர்கள், வெளியிடங்களில் தங்கியுள்ளவர்கள்,  காணமால் போனவர்கள், அண்மையில் மரணமடைந்தவர்கள், வேறு நபர்கள் தங்குவது போன்ற விபரங்கள் சேகரிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X