2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மதுபாவனைக்கு எதிரான விழிப்புணர்வுக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2011 ஜூன் 28 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். மாவட்ட போரூட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வலிதெற்கு உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் மதுபாவனைக்கு எதிரான நவீன விழிப்புணர்வுக் கண்காட்சியொன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அணித் தலைவர் ஆர்.சிவநாயகம் தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

தேசியகொடியை சுன்னாகம் பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி உபபரிசோதகர் மஹிந்த திலகரட்ன ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து பிரதேச செயலக கொடியை பிரதேச செயலாளர் மஞ்சுளாதேவி சதீஸ்சும் போரூட்கொடியை சிவநாயகமும் ஏற்றிவைத்தார்கள்.  இக்கண்காட்சியை பிரதேச செயலாளர் மஞ்சுளாதேவி சதீசன் நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார்.

அதிக எண்ணிக்கையான பாடசாலை மாணவர்கள் இக்கண்காட்சியை கண்டு களித்த நிலையில் இரண்டாவது நாளாக  இன்றையதினம் கண்காட்சி நடைபெறுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X