2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அளவெட்டியில் த.தே.கூ. மீதான தாக்குதல்; தேர்தல் திணைக்களம் வருத்தம் தெரிவிப்பு

Menaka Mookandi   / 2011 ஜூன் 28 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். அளவெட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நடத்தப்பட்ட அடாவடிச் சம்பவம் தொடர்பாக தாம் வருந்துவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் யாழில் நடைபெறாமல் இருப்பதற்காக தேர்தல் திணைக்களத்தினால் பாதுகாப்பு அமைச்சுக்கும் ஜனாதிபதி மஹிந்தவுக்கு தெரியப்படுத்தியிருப்பதாகவும் தேர்தல் திணைக்காள உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.முகமட் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றியுள்ள அவர், யாழ்ப்பாணத்தில் நீதியான முறையிலும் ஜனநாயக ரீதியிலும் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வன்முறையில்லாத ரீதியில் தேர்தலை நடத்துவதற்கு பொலிஸாரின் அனுமதி கோரப்பட்டுள்ளதுடன் ஜனநாயக ரீதியில் அரசியல் கட்சிகள் தமது தேர்தல் பிரச்சாரத்தை நடத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தேர்தலை குழப்புவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ள அவரிடம், யாழ்ப்பாணத்தில் இராணுவப் பிரசன்னம் அதிகரித்த வேளையில் நீதியான ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறும் என நீங்கள் நம்புகிறீர்களா? எனக் கேள்வி எழுப்பப்பட்டதற்கு,  யாழ்ப்பாணத்தில் நீதியான ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்துவதற்கு உரிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்புக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இடம்பெறாத வண்ணம் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X