2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வன்முறையில்லா தேர்தல் நடத்துவது தொடர்பான கலந்தாய்வரங்கு

Kogilavani   / 2011 ஜூன் 28 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ்.மாவட்டத்தில் வன்முறையற்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக யாழ். மாவட்ட செயலகத்தில் தேர்தல் திணைக்கள அதிகாரிகளினால் இன்று செவ்வாய்கிழமை விசேட கலந்தாய்வரங்கு ஒன்று நடைபெற்றது.

இதன்போது தேர்தல் திணைக்களத்தின் உதவித் தேர்தல் ஆணையாளர் எம். முகமட், முன்னாள் உதவித் தேர்தல் ஆணையாளர் தர்மராஸ, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் தேர்தல் ஆலோசனையார்கள் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள்,  யாழ். மாவட்டத்தில் உள்ளுராட்சி தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் ஜனநாயக பண்புகளுடனும் நடத்துவது தொடர்பாக கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவ, பொலிஸ் அதிகாரிகள், அரசியல் கட்சி உறுப்பினர்கள், சுயேட்சைக்குழு பிரதிநிதிகள், வேட்காளர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X