Super User / 2011 ஜூன் 28 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தப்பட்ட சுவரொட்டிகள் இன்னமும் அகற்றப்படாமல் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வல்வெட்டித்துறை நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளருமான எம்;.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
அரச சொத்துக்கள் மற்றும் வளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அது தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயற்பாடாக இருப்பதாக அதனை அகற்றுமாறும் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை தேர்தல் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிற்பாடு வேலைவாய்ப்புக்கள், அதற்;கான நேர்முக தேர்வுகள், இடமாற்றங்கள் மற்றும் பணி நீக்கங்கள் இடம்பொறுவதாக தேர்தல்கள் திணைக்கள் அதிகாரிகளுக்கு அவர் தெரியப்படுத்தினார்.
இம்சம்பவங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் திணக்களம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் எனத் தேர்தல் திணைக்கள உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago