Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 29 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். மாவட்டத்தில் படைத்தரப்பினரால் நடத்தப்படவுள்ள சனத்தொகை மதிப்பீட்டுக்கான பயிற்சி வகுப்புகள் நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளன.
பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் ரீதியாக நடைபெறவுள்ள இந்த பயிற்சி வகுப்புகளில் 40 பேர் என்ற அடிப்படையில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தொடர்ந்து வகுப்புக்கள் நடைபெறவுள்ளன.
படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்படவுள்ள இந்த சனத்தொகை மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுப்பதற்கு வசதியாக பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் கடமையாற்றும் புள்ளிவிபரத்திணைக்கள அலுவலர்களுக்கு தென்னிலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள வாகனங்கள் போக்குவரத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தென்னிலங்கையிலிருந்து மேலதிக புள்ளிவிபர அலுவலர்களும் வந்துள்ளனர். இந்த பயிற்சி வகுப்பில் ஆளணியினராக ஆசிரியர்களும் மற்றும் வழிகாட்டுனர்களாக கிராம அலுவலர்களும் செயற்படவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago