Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 30 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
பிரபல வர்த்தகரும் பத்திரிகை வெளியீடுகளின் விநியோகஸ்தரும் யாழ். மாவட்ட சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான இராசரட்னம் இராமச்சந்திரன் தனது 70ஆவது வயதில் நேற்று புதன்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.
வாகன விபத்தில் படுகாயமடைந்த இவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மாலை நல்லூரிலுள்ள தனது வீட்டிலிருந்து உறவினரைச் சந்திப்பதற்காக சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியுள்ளது. மேற்படி விபத்தில் படுகாயமடைந்த இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
நல்லூர் வைமன் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இராசரட்ணம் இராமச்சந்திரன் ஒரு சமூகசேவகரும் ஆவார். இவரது இறுதிக்கிரியைகள் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இதேவேளை, இவர் மீது மோதியதாகத் தெரிவிக்கப்படும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago