2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ். மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் யார்?; த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே மோதல்

Super User   / 2011 ஜூன் 30 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ் மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பாக  இம்மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவருக்கிடையில் இன்று மோதல் ஏற்பட்டது.

இன்று வியாழக்கிழமை காலை யாழ் மாநகரசபையின் இவ்வருடத்திற்கான 6 ஆவது கூட்டத்தொடர் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தின்போது உரையாற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் முடியப்பு றெமிடியஸுக்கு மேயர்அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு உறுப்பினரான பரஞ்சோதி ஆட்சேபித்தார். அதையடுத்து  அவருக்கு எதிராக முடியப்பு றெமிடியஸ் கடும் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவராக தன்னைத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்தது எனக் கூறிய அவர் தண்ணீர் போத்தலையும் வீசி எறிந்தார்.
அவரின் செயற்பாடுகளை  நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மேயரிடம் மாநகரசபை உறுப்பினர் பரஞ்சோதி கூறினார். தன்னால் எதுவும் செய்ய முடியாது என மேயர் தெரிவித்ததையடுத்து பொலிஸாரிடம் சக உறுப்பினர் முடியப்பு றெமிடிஸுக்கு எதிராக பொலிஸாரிடம் முறையிடப்போவதாக உறுப்பினர் பரஞ்சோதி தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0

  • ram Friday, 01 July 2011 04:55 AM

    ஹி ஹி ஹி TNA ய நினைச்சா சிரிப்பு தாங்க முடியலப்பா.....

    Reply : 0       0

    senthooran Friday, 01 July 2011 01:12 PM

    'தூய்மையான' TNA பாராளுமன்ற வேட்பாளர் பட்டியலை தயார்ப்படுத்திய 'நடைமுறை அரசியல ' விளங்கிய அரசியல் வல்லுனர்களுக்கு பியசேனவிற்கு அடுத்ததாக ரெமிடியசின் அன்பளிப்பு !!!
    வாழ்க 'நடைமுறை அரசியலும் ' 'அரசியல் ஆய்வாளர்களும்,வல்லுனர்களும்'

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X