2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 30 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி, தாஸ்)

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதி இன்று வியாழக்கிழமை காலை தப்பியோடியுள்ளதாக யாழ். சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நான்கு வருடமாக கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க கைதி ஒருவரே இவ்வாற தப்பியோடியுள்ளார்.

இவர் இன்றைய தினம் வயிற்றுவலி காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிறைக்காவலர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த இவர் திடீரென யாழ். போதனா வைத்தியசாலையின் பின் மதிலில் ஏறிப்பாய்ந்து தப்பிச் சென்றுள்ளதாக யாழ். சிறைச்சாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO Saturday, 02 July 2011 02:58 AM

    நல்ல தரமான வைத்தியசாலை தேடி சென்றிருப்பார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X