2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஜ.ம.சு.கட்சியின் யாழ். அலுவலகம் திறந்துவைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 ஜூலை 01 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

ஜக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் யாழ். அலுவலகம் யாழ்ப்பாணத்தில் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ். கோவில் வீதியில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ். மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மக்களின் சுதந்திரமான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக  யாழ். மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் யாழ். அலுவலகம் திறந்துவைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட இணைப்பாளர் அங்கஜன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X