Menaka Mookandi / 2011 ஜூலை 01 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தன்னைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றுவதற்கு திரைமறைவில் சதி செய்யப்படுவதாக யாழ்.மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் முடியப்பு றெமிடியஸ் இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை எதிர்கட்சி உறுப்பினர்களினால் பின்னப்படும் சதிவலையில் தான் விழ மாட்டேன் என்றும் தன்னை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிக்கமுடியாது எனவும் சுயநல அரசியலுக்காக தனது பெயரை கலங்கப்படுத்துவதாகவும் என்னை ஒருபோதும் அரசியலில் இருந்து ஓரம் கட்டிடமுடியாது எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.மாநகர சபையில் தனது தலைமையின் கீழ்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ்.மாநகர சபை எதிர்கட்சி உறுப்பினர்கள் இயங்க முடியும் என்றும் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படாதவர்கள் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago