2025 மே 20, செவ்வாய்க்கிழமை

எதிர்ப்பு அரசியல் செய்து அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியாது : ஹிஸ்புல்லா

Super User   / 2011 ஜூலை 02 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

'உலக அரசியல் வேறு சூழ்நிலையில் மாறிக் கொண்டு இருக்கிறது இந்த வேளையில் எதிர்ப்பு அரசியல் செய்து அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியாது என சிறுவர் அபிவிருத்தி பெண்கள் வலுவூட்டல் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை மாலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் யாழ்.மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையியேயே அவர் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'முழு நாட்டிற்குமான கல்வி, நிர்வாகம், பாரம்பரியங்களைக் கொண்ட யாழ். மண் கடந்த 30 வருடங்களாக யுத்தத்தின் வடுக்களைத்தாங்கி நின்றது. இன்று குண்டுச்சத்தங்கள் இல்லை. பீரங்கி ஒசைகள் இல்லை. பயங்கரவாத செய்பாடுகள் இல்லை. அமைதியான சமாதானம் ஜனாதிபதி மஹிந்தவினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சமாதானத்தை நிரந்தர சமாதானமாக்கி உங்களது அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

எல்லாத்துறைகளிலும் அரசாங்கத்தை விமர்சித்துக் கொண்டு, ஆர்பாட்டம் நடத்திக் கொண்டு, தங்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளமுடியாமல் இருக்கிறார்கள். தங்களது அடிப்படை எதிர்ப்பு அரசியலினால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அதேவேளை, யுத்தத்தால் சிதைந்து போன வடமாகாணத்தை கட்டமுடியாது .

எமது இளமைப் பருவத்தில் நாங்கள் அனுபவிக்க வேண்டிய எதையுமே கடந்த காலங்களில் பெற முடியாமல் போய்விட்டது. நாங்கள் இழந்த எதிர்காலத்தை எமது சந்ததியினர் பெற்றுக் கொள்ளும் பொருட்டு எதிர்பரசியலைக் கைவிடுங்கள்.


இரத்தத்தை சூடேற்றி, நரம்புகளில் முறுக்கேற்றி எங்களை வைத்து அரசியல் பிரச்சாரம் செய்பவர்களை இனம் காணவேண்டும். எங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற சமூகமாக நாங்கள் மாறவேண்டும்' என்றார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X