2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழில் அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர்களின் அமைதி பேரணி

Super User   / 2011 ஜூலை 06 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இலங்கை பல்கலைக்கழக கல்வியின் தரத்தை நிலை நிறுத்துமாhறு வலியுறுத்தி அனைத்து  பல்கலைக்கழக ஆசிரியர்களின் அமைதி பேரணி எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

யாழ். புகையிரத நிலைய முன்றலில் ஆரம்பமாகும் ஊர்வலம் யாழ். வைத்தியசாலை வீதி, காங்கேசன்துறை வீதியூடாக வீரசிங்கம் மண்டபத்தை சென்றடைந்ததையடுத்து மாபெரும் பொதுக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இதில் பல்கலைக்கழகங்களின் கல்வியின் தரத்தை நிலைநிறுத்துமாறும், பல்கலைக்கழக ஆசிரியர் தொழில் தனித்துவமான தொழிலாக அங்கிகரிக்குமாறும், பல்கலைக்கழக ஆசிரியரியர்களின் சம்பள பிரச்சனைக்கு ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கும் படி அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக இந்த அமைதிப்பேரணி நடைபெறவுள்ளது.

இவ் அமைதிப் பேரணி தொடர்பாக இன்று புதன்கிழமை யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன், செயலாளர் எஸ். ராசகுமார். யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத் தலைவர் கலாநிதி எல். அறிவழகன், செயலாளர் கலாநிதி பி.ஜங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X