2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'யாழ். அளவெட்டிச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை'

Kogilavani   / 2011 ஜூலை 12 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். அளவெட்டித் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தி வருவதாகவும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சீ.ஐ.வீரசிங்க நேற்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  இதுக் குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சம்பவ இடத்திற்கு  நாங்கள் சென்று பார்வையிட்டபோது ஒரு கதிரை மாத்திரமே கவிழ்ந்து கிடந்தது. இச்சம்பவத்தில் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் காயமுற்றனர். இதைத் தவிர பாரியளவு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இத்தாக்குதலை இனந்தெரியாத குழுவினரே மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டமொன்று கடந்த மே  மாதம் 16ஆம் திகதி யாழ். அளவெட்டியில் நடைபெற்றது. இதன்போது மண்டபத்துக்குள் திடீரென நுழைந்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு புகாரிட்டுள்ளது.

இதற்கான விசாரணைகளை மேற்கொள்ள இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X