2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழில் இரு வருடங்களில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படும்

Menaka Mookandi   / 2011 ஜூலை 12 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் இன்னும் இரண்டு வருடங்களில் கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்கள் முழுமையாக அகற்றப்பட்டு விடும் என வடபிராந்திய மிதிவெடி செயற்திட்ட பொறுப்பதிகாரி வரதராஜ முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். கிறின் கிளாஸ் விடுதியில் நேற்று திங்கட்கிழமை மிதிவெடியகற்றும் பிரிவினருக்கான பயிற்சிப்பட்டறையொன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகளும் துரித மீள்குடியேற்றமும் நடைபெற்று வருவதினால் மக்கள் மீளக்குடியேரும் பிரதேசங்களிலுள்ள கண்ணிவெடிகள் முன்னிரிமை அடிப்படையில் அகற்றப்பட்டு அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

இன்னும் இரண்டு வருடங்களில் யாழ்.மாவட்டத்தில் உள்ள காணிகளில் இருந்து முழுமையாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிடும். அத்தோடு கண்ணிவெடியகற்றும் பிரிவில் ஆளணி வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X