2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பளையில் போசாக்கு உணவு கண்காட்சி

Menaka Mookandi   / 2011 ஜூலை 12 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

பளையில் 'எல்லோருக்கும் போசாக்கான உணவு' என்ற கண்காட்சியினை சுகாதாரப் பணிமனை நடத்தியுள்ளது. புலோப்பளை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் இந்தக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்துள்ளார்.

போர் மற்றும் இடப்பெயர்வு போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் உடற்போசாக்கைச் சீர்ப்படுத்தும் நோக்கில் இந்தக் கண்காட்சியை பளைப் பிரதேச சுகாதாரப் பணிமனை ஏற்பாடு செய்திருந்தது.

மீள்குடியேறிய மக்களின் போசாக்கு நிலையே இந்தக் கண்காட்சியை நடத்துவதற்கான காரணத்தை ஏற்படுத்தியது என பளை வைத்தியசாலை வைத்திய அதிகாரி செல்வி மைதிலி தெரிவித்துள்ளார்.

இந்தக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில், பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் முகுந்தன், புலோப்பளை றோமன் கத்தோலிக்க வித்தியாலய அதிபர் ஜீவரத்தினம், பிரதேச கிராம அலுவலர்கள், சுகாதார அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X