2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யுத்தத்தில் சேதமடைந்த கடற்கலங்களின் சிதைவுகளை ஏலத்தில் விற்க நடவடிக்கை

Super User   / 2011 ஜூலை 15 , பி.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்திர)

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது காங்கேசன்துறை துறைமுகத்தில் தாக்கியழிக்கப்பட்ட கடற்கலங்களின் சிதைவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக துறைமுகம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்தது.

'இந்த சிதைவுகள் அகற்றப்பட்டபின் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி வேலைகள் அடுத்த மாதம் தொடங்கும் என அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆறு கப்பல்களின் சிதைவுகளை அகற்றும் வேலை ஒரு இந்திய கம்பனியிடம் கொடுக்கப்பட்டுள்ளது அவ்வட்டாரங்கள் கூறின.

'இந்த கப்பல் சிதைவுகள் அகற்றப்பட்ட பின்னர் அவை ஏலத்தில் விடப்படும் என அமைச்சின் அதிகாரியொருவர்  கூறினார்.   துறைமுக புனரமைப்பு பூர்த்தியடைந்தபின் வடக்குக்கான பொருட்களை குறைந்த செலவில் கப்பல் மூலம் அனுப்பக்கூடியதாக இருக்கும் என அந்த அதிகாரி கூறினார்.
 


  Comments - 0

  • risimb Sunday, 17 July 2011 09:40 AM

    நீங்க இதையும் விட்டு வைக்காம' இதிலும் லாபம் எடுக்கப்போறீங்களா இன்னும் எதிலோ? யார் கண்டா? உலகிற்கு இதெல்லாம் பப்ளிசிட்டியா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X